
கர்மாவே வாழ்வைத் தீர்மானிக்கிறது. ஏதோவொரு கட்டத்தில் கர்மாவே வாழ்வு என்றாகிறது. கர்மன் எல்லா மனங்களின் உள்ளடுக்குகளிலும் எளிதாக நுழைந்து வெளியேறுகிறது. தானே நித்தியம் என்கிறது.
மனித வாழ்வு குறித்த என்றென்றைக்குமான கேள்விகளை முன்னிறுத்தும் இந்த நாவல், இறுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கேள்விகளையே விடைகளாகத் தருகிறதோ என்கிற எண்ணத்தையும் உண்டாக்கத் தவறவில்லை.
ஐந்து தலைமுறை மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை, வாய்மொழிக் கதைகள் போல முன்பின்னாகச் சொல்லும் பாணியின் மூலம், உள்ளடக்கத்திலும் சொல்முறையிலும் பிரமிக்க வைக்கிறார் ஹரன் பிரசன்னா.
'மாயப் பெரு நதி' நாவலைத் தொடர்ந்து வெளியாகும் ஹரன் பிரசன்னாவின் இரண்டாவது நாவல் இது.
₹410.00
Details
Haranprasanna | ஹரன் பிரசன்னா
Swasam Publications Private Limited
311
1st Edition
Novels | நாவல்கள்