
‘சுகாவின் எழுத்து எந்த வகைக்கும் உட்படாத எழுத்து. அதனால் தனக்குப் பிடிக்கும்’ என்றார் வெங்கட் சாமிநாதன். சுகாவின் எழுத்தை நடைச்சித்திரம் என்று சொல்லலாம். புனைவு அல்லாத சுகாவின் நடைச்சித்திரங்களில், புனைவில் ஒரு வாசகனுக்குக் கிடைக்கின்ற அத்தனையும் கிடைக்கும். இந்த வகையான நடைச்சித்திர வடிவத்தில் சுகாவை அ.முத்துலிங்கத்தின் தொடர்ச்சியாகச் சொல்லலாம். ஆச்சரியமூட்டும் அரிய இயல்பான நகைச்சுவை சுகாவின் பலம். மனம் விட்டுச் சிரிக்க வைக்கும் சுகாவின் எழுத்து சில சமயம் நம்மை வாய் விட்டு அழவும் வைத்து விடும். அபுனைவில் நிகழ்த்த முடியக்கூடிய அத்தனை சாத்தியங்களையும் சுகா தனது கட்டுரைகளில் நிகழ்த்திப் பார்க்கிறார். சாதாரண நிகழ்வுகள் கூட சுகாவின் நடைச்சித்திரத்தில் புதிய பரிமாணம் பெறுகின்றன. தொடக்கம் முதல் முற்றுப் புள்ளி வரை கட்டிப் போட்டுப் படிக்க வைக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரர் சுகா.
₹150.00
Details
Suka | சுகா
Swasam Publications Private Limited
128
1st Edition
Articles