
ரமண மஹரிஷி 16 வயதில் மெய்ஞானம் அடைந்தவர். இந்திய அத்வைத தத்துவ மரபின் உச்சம். புராணங்களில் படிக்கக் கிடைத்த மஹரிஷி என்ற வார்த்தைக்கு நம் கண் முன்னே வாழ்ந்த உதாரணம். திருவண்ணாமலையிலிருந்து ஓரடி கூட நகராமல், உலகெங்கிலும் இருந்து பலரையும் தன்னிடம் வரவைத்த பேராற்றல். இறைநிலையை அடைந்தபின், மலைகளுக்குள் ஓடி ஒளியாமல், தன் இறுதிநாள் வரை அனைவருக்கும் தரிசனமளித்து, தன்னுள் ஒளிர்ந்த பேரமைதியை அனைவருக்கும் தந்த பெருங்கருணை. அனைத்து உயிர்களையும் ஒன்றுபோல் பாவித்து, பசுவுக்கும் முக்தியளித்த, தூய அத்வைதப் பேரொளி. வேத, உபநிடத வாக்கியங்களுக்கு உயிர் கொடுத்தது போல் எழுந்து வந்த இந்திய மரபின் முதிர்கனி. பகவான் ரமணரின் வாழ்க்கைச் சரிதத்தை அழகாக எடுத்துச் சொல்கிறது இந்நூல். சத்தியப்பிரியன் மஹரிஷிகளின் வாழ்க்கையை மதுரமொழியில் எழுதுபவர். ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் வாழ்க்கை வரலாறான 'பொற்கை சுவாமிகள்' நூலைத் தொடர்ந்து இவரது 'ரமண புராணம்' நூல் வெளியாகிறது. "Ramana Maharishi attained enlightenment at the age of 16. The pinnacle of the Indian Advaita philosophical tradition. A living example of the word Maharishi as we read in the Puranas. A genius who never moved a step from Tiruvannamalai and brought many people to him from all over the world. After attaining divine status, he ran to the mountains and did not hide himself, giving darshan to all until his last day. , the great grace that gave everyone the peace that shone in him. The pure Advaita brilliance that treated all living beings equally and saved even the cow. The elder daughter of the Indian tradition that arose as if it gave life to the words of the Vedas and Upanishads. This book beautifully tells the life story of Lord Ramana. Satyapriyan wrote the lives of the Maharishis in Maduramozhi. His book 'Ramana Puranam' will be released after 'Porkai Swamigal', a biography of Sri Seshatri Swami."
₹140.00
Customize
Sathiyapriyan | சத்தியப்பிரியன்
Swasam Publications Private Limited
111
1st Edition
Spirituality | ஆன்மீகம்