
Godrej, HCL உட்பட இந்தியாவின் மிகச் சிறந்த தொழில் நிறுவனங்களில் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அனுபவம் மிக்கவர் இந்நூலின் ஆசிரியர் பி.வி.ராமஸ்வாமி. தனது ஒட்டுமொத்தப் பணி அனுபவத்தின் அடிப்படையில் இந்நூலை எழுதியுள்ளார். எளிய பழக்கத்தை உன்னதமான வழக்கமாக மாற்றுவதன் மூலம், தொழில் நிறுவனங்களில் நிகழக்கூடிய தவறுகள், அதனால் உண்டாகக்கூடிய இழப்புகளை எப்படித் தவிர்க்கலாம் என்பதை விரிவாகப் பதிவு செய்கிறார் ஆசிரியர். உன்னத வழக்கம் நமக்குத் தரும் நன்மைகளைப் பற்றிப் புத்தகமெங்கும் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. பணியாளர், புதிதாகத் தொழில் தொடங்க நினைப்பவர் தொடங்கி, தொழில் நிறுவனத்தின் தலைவர் வரை, அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமான விஷயங்களை விரல் பிடித்துச் சொல்லித் தருகிறார் ஆசிரியர். தொழில் சார்ந்து ஏற்படக்கூடிய பல்வேறு சந்தேகங்களுக்கு மேம்போக்கான தீர்வுகளைத் தர முனையாமல், தனது அனுபவத்தின் மூலம் நடைமுறைச் சாத்தியமுள்ள மகத்தான தீர்வுகளை ஆசிரியர் முன்வைப்பது, இந்தப் புத்தகத்தை அனைவருக்குமானதாக மாற்றுகிறது. Godrej, HCL PV Ramaswamy, the author of this book, has an experience of more than 40 years in India's best industrial companies including He has written this book based on his overall work experience. The author records in detail how to avoid the mistakes that may occur in business enterprises and the resulting losses by changing a simple habit into a noble one. Books are full of information about the benefits that noble habits can give us. From the employee, the person who wants to start a new business, to the head of the company, the author tells the essential things that everyone needs to know. The author does not tend to give superficial solutions to the various doubts that may arise in the profession, but presents great practical solutions through his experience, which makes this book accessible to all.
₹200.00
Details
P.V.Ramaswamy | பி.வி.ராமஸ்வாமி
Swasam Publications Private Limited
168
1st Edition
Self Improvement | சுய முன்னேற்றம்