0

Lal Bahadur Shastriyin Marma Maranam | லால் பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம்

இந்தியாவின் பிரதமர் ஒருவர் வெளிநாட்டில் மர்மமான முறையில் மரணமடைகிறார். அவர் கொல்லப்பட்டார் என்ற பலமான சந்தேகம் எழுகிறது. ஆனால் இன்று வரை உண்மை என்ன என்பது வெளியாகவில்லை. இந்தியா அல்லாமல் வேறொரு நாட்டின் பிரதமர் இப்படி வெளிநாட்டில் கொல்லப்பட்டிருந்தால் அந்த நாடு என்னவெல்லாம் செய்திருக்கும்? ஆனால் ஏன் அன்றைய இந்திய அரசு இது குறித்து அக்கறை எடுக்கவில்லை? இந்த அலட்சியத்துக்குப் பின்னால் இருப்பது என்ன? இது வெறும் அலட்சியம் மட்டும்தானா அல்லது வேறேதும் உள்நோக்கம் உண்டா? சாஸ்திரியின் கட்சியான காங்கிரஸின் மௌனத்துக்கு என்ன காரணம்? தன் கட்சியின் பிரதமர் இப்படி மர்மமான முறையில் இறந்திருக்கும்போது அதை இந்திரா காந்தி எப்படிக் கையாண்டார்? இவை அனைத்தையும் அலசுகிறது இந்த நூல். லால் பகதூர் சாஸ்திரியின் மரணத்தின்போது இந்தியாவில் நிலவிய அரசியல் சூழலையும், யாரெல்லாம் அந்த மரணத்துக்குக் காரணமாக இருந்திருக்கக் கூடும் என்கிற அன்றைய யூகங்களையும் விவரிக்கிறது இந்தப் புத்தகம். புகழ்பெற்ற தாஷ்கண்ட் ஒப்பந்தத்தின்போது நடந்தது என்ன என்பதைப் பல ஆதாரங்களுடன் எழுதி இருக்கிறார் ஆசிரியர் சக்திவேல் ராஜகுமார். "A Prime Minister of India dies mysteriously abroad. There is strong suspicion that he was murdered. But till today the truth is not revealed. If the prime minister of a country other than India was killed like this abroad, what would that country have done? But why the Indian government of the day did not care about this? What is behind this indifference? Is it just carelessness or is there some other motive? What is the reason for the silence of Shastri's party Congress? How did Indira Gandhi handle the mysterious death of her party's Prime Minister? This book analyzes all these. This book describes the political situation in India at the time of Lal Bahadur Shastri's death and the speculations of the day as to who might have been responsible for that death. Author Sakthivel Rajakumar has written with many sources what happened during the famous Tashkent agreement."
₹160.00
Customize
Sakthivel Rajakumar | சக்திவேல் ராஜகுமார்
Swasam Publications Private Limited
136
1st Edition
வரலாறு | History
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
- Can't add this product to the cart now. Please try again later.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.