"இந்திய சுதந்திரப் போராட்டம் இரண்டு வழிகளை முதன்மையாகக் கொண்டிருந்தது. ஒன்று, அமைதி வழியிலான அஹிம்சைப் போராட்டம். இன்னொரு, ஆயுதப் போராட்டம்.
சரியாகச் சொல்லவேண்டுமென்றால், பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிக்க முடிவெடுக்க முக்கியக் காரணங்களுள் ஒன்று, இந்தியாவில் தீவிரமாகிக்கொண்டு சென்ற ஆயுதப் போராட்டமும்தான் எனலாம். ஆனால் அஹிம்சைப் போராட்டம் இங்கு பேசப்பட்ட அளவுக்கு ஆயுதப் போராட்டம் பேசப்படவில்லை. காந்திஜியின் மக்கள் செல்வாக்கும், அரசியல்ரீதியான வெற்றியும் இதற்குக் காரணம் என்றாலும், அவை மட்டுமே காரணம் அல்ல.
"
The Indian freedom struggle had two primary paths. One is peaceful non-violent struggle. Another, armed struggle.To be precise, one of the main reasons for the decision of the British government to grant independence to India was the armed struggle that was taking place in India. But the armed struggle was not discussed as much as the non-violent struggle was discussed here. Gandhiji's popular influence and political success were the reason for this, but they were not the only reason.